Sunday, February 10, 2013

அமாவசை அன்று மறைந்தது நிலவு மட்டுமல்ல.
நேற்று  அதிகாலை 5 மணி அளவில் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும், அன்னை ஸ்ரீதேவி உபாசகருமான நண்பர் திரு மலர்மன்னன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடனும் ஆற்றொணா துயரத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். 


அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


எனக்கு குருவைப் போன்றவர் .. ஆச்சர்யமூட்டும் மேலாண்மையும் அன்பும் கொண்டவர் ... எழுதிய முறையில், கொள்கையில் வாழ்ந்த ஆச்சார்யர்.... பாரதம் முழுதும் பயணம் செய்து பல பிரச்னைகளுக்காக ஏழைகள், பழங்குடி மக்களுக்காக, பாதிக்கப் பட்டவர்களுக்காக குரல் கொடுத்தவர், இஸ்லாமிய வெறியர்களின் ஆசிட் வீச்சால் இவர் கால் வெந்த பொது, சற்றும் துவளாமல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நலப்பணி செய்ய ஆரம்பித்தவர்.. காமராஜர், அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.. அவர் எழுதிய 'கண் விழித்த கானகம்' புத்தகமே அவர் பழங்குடிகளிடம் கொண்டிருந்த தொடர்புக்கு ஆதாரம். அதற்கு நான் எழுதிய விமர்சனம் இதோ :http://www.tamilhindu.com/2009/02/birsa-munda-book-review/