Wednesday, October 4, 2017

என்னவானான் போதி தர்மன்?


போதிதர்மனை விஷம் வைத்து சில சீனர்கள் கொலை செய்கிறார்கள். புதைத்த இடத்தில் கோவிலும் எழுப்பப் படுகிறது.
வடக்கு வெய் ராஜ்யத்துக்கான சீன தூதுவன் சாங்யூன், பாமீர் முடிச்சில் போதிதர்மன் கையில் ஒற்றை செருப்புடன் செல்வதை பார்க்கிறான். வணங்கிவிட்டு, "குருவே நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" என்கிறான். "தாய் நாட்டிற்கு திரும்பி செல்கிறேன்" என்று பாரத திசையை காண்பிக்கிறார் போதி தர்மர். "என்னை சந்தித்ததை வெளியில் சொல்லாதே. ஆபத்து நேரும்".
சாங்யூன் சீனதேசத்தை அடைகிறான். மன்னனிடம் சொல்கிறான்: "தமோ குருவைப் பார்த்தேன். பாரததேசத்துக்கு சென்று கொண்டிருக்கிறார். ஒரே ஒரு செருப்புடன் அரவமின்றி நடந்து கொண்டிருக்கிறார்". மன்னன் சொல்கிறான்:"குருநாதர்  இறந்து பலவருடம் ஆயிற்று. பொய் சொன்னால்  உனக்கு தண்டனை நிச்சயம்". சாங்யூன் ஸ்திரமாக அதையே சொல்லிக்கொண்டிருக்கவே சந்தேகம் வர கல்லறையை தோண்டுகிறார்கள். உள்ளே போதிதர்மன் உடலோ, ஆயுதங்களோ, துணிகளோ இல்லை . மற்றொரு செருப்பு மட்டும்.
(பிகு: சீன ஓவியங்களில் புத்தரையும், போதி தர்மனையும் பெரிய நெற்றி,பெரிய கண்களோடு, நிறைய ரோமம், நல்ல உடற்கட்டோடு வரைவது மரபு. அதற்கு காரணம் சீனர்கள் சிறுகண்கள் , நெற்றி, ரோமமே இல்லாமல் நோஞ்சானாக இருந்ததுதான் )



--------------------------------