Saturday, February 27, 2010

சாநி எடுக்கும் ஹாலிவுட் படம் :-)

பெரும் கலகக்கார* எழுதாளர் ஹாலிவுட் படம் எடுக்கப் போகிறாராம்.. அவர் கதையை அமெரிக்க ஆண்டனி ஹாப்கின்ஸ் முதல் ஜப்பானிய ஜாக்கிசான் வரை கேட்டிருப்பதால், கலக எழுத்தாளருக்கே ஹீரோவைத் தேர்வு செய்ய உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறதாம் :-) .. அதனால் கலக எழுத்தாளருக்கு அதிக தொகையில் டிடி அனுப்பும் கலக வாசகருக்கு ஹீரோ வாய்ப்பு கிடைக்குமாம். ஹீரோ கனவு இருக்கும் யாரும் டிடி அனுப்பி முயற்சி செய்யலாமாம். துணியில்லாமல் நடிக்க தைர்யம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமாம். 'நம்பிக்கையாள'ராக இருந்தால் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் அவார்டும் கலக எழுத்தாளரே வாங்கி கொடுத்திடுவாரம்.


* கலகக்கார எழுத்தாளர் ஸ்பானிஷ் மொழியில் எழுதிய 'தொறக்க பெர்ரோ' என்னும் புதினம்தான் நைஜீரியா நாட்டில் போன வாரம் நடந்த, கையாலாகாத மன்னர் 'மாமாடோ தஞ்சா'வை மக்கள் பதவியிறக்கிய பெரும்புரட்சிக்கு காரணமாம்.

* இவரின் இக்கதையும் திருடியது என்று மற்ற பின்நவீனத்துவ எழுதுதாளர்கள் நினைப்பது போல் இல்லையாம். தருமி ஸ்டைலில் 'மத்தத விடுங்க. இந்தக்கதை நானேதான் எழுதினேன்.. என்ன? நாகூர்ல 1992 ல யாரவது எழுதின டைரிலேர்ந்து திருடினதுன்ன்னு நினைச்சீங்களா?... சரி சரி
கைல ஏதாவது இருந்தா சைடு டிஷ்கு குடுத்துட்டு போங்க' என்றாராம்.

* தினகரன் கொலைஞர் ஆட்சியை நம் பின்நவீனத்துவ எழுத்தாளரின் புதினங்கள் புரட்சியால் கவிழ்த்துவிடும் என்ற பயத்தில் ஒரு 'சி' இவருக்கு கொடுத்துள்ளார்களாம். இதனால் மார்க்சிய முறையில் அன்புக்குக் கட்டுப்பட்டு அமைதி காத்து இருக்கிறாராம்.

குறுகுறுப்பு


அண்ணா கண்ணனே http://annakannan.blogspot.com/ இந்தக் கவிதையைப் பாராட்டினர்.

Sunday, February 7, 2010

மந்திர புஷ்பம் -

நான் பால்யத்தில் அபினவத்தில் இருந்தபோது, எப்போதாவது சமார்த்தனையோ, ராதா கல்யாணமோ அல்லது ஏதாவது ஒரு பூஜையோ நடக்கும். அப்போதெல்லாம் இந்த மந்திர புஷ்பங்கள், ஒதுவோர்களின் சாரீரங்களில் மலரும்போதேல்லாம் ஒரு வசப்பட்டு, வியப்புடன் இதைக் கேட்டுக் கொண்டிருப்பேன். ஏன் காதில் நுழையும் இம்மந்திரங்கள் உடல் முழுதும் ஒரு அதிர்வை ஏற்படுத்தும் ஒவ்வொரு முறையும் மந்திரம் பூர்த்தியான பிறகே நான் உணர்ந்த மாயஜாலம் விலகும். அப்போது எந்த அர்த்தமும் புரிந்ததில்லை. கொடியில் பூவாய், பூவில் தேனாய், தேனில் சுவையாய் என்றுதான் பொதுவாக இலக்கியங்களில் எவரும் படித்திருக்கக் கூடும். அது அழகின் ஆடல். ஆனால் இந்த வேதங்களில் கொடியில் கொடியாய், பூவில் பூவாய் , தேனில் தேனாய், அதன் இனிப்பில் சுவையாய் ஆனது எதுவோ அதைப் பற்றிய சிந்தனை நிகழும். இது ஆன்மாவின் தேடல். மந்திர புஷ்பங்களை நுகர்பவர்கள் நுகர்ந்து கொள்ளட்டும். கேட்டு ரசிப்பவர்கள் ரசிக்கட்டும். தேனை ருசிப்பவர்கள் ருசிக்கட்டும். உள்ளத்தில் உணர்பவர்கள் உயரட்டும்: