Sunday, February 7, 2010
மந்திர புஷ்பம் -
நான் பால்யத்தில் அபினவத்தில் இருந்தபோது, எப்போதாவது சமார்த்தனையோ, ராதா கல்யாணமோ அல்லது ஏதாவது ஒரு பூஜையோ நடக்கும். அப்போதெல்லாம் இந்த மந்திர புஷ்பங்கள், ஒதுவோர்களின் சாரீரங்களில் மலரும்போதேல்லாம் ஒரு வசப்பட்டு, வியப்புடன் இதைக் கேட்டுக் கொண்டிருப்பேன். ஏன் காதில் நுழையும் இம்மந்திரங்கள் உடல் முழுதும் ஒரு அதிர்வை ஏற்படுத்தும் ஒவ்வொரு முறையும் மந்திரம் பூர்த்தியான பிறகே நான் உணர்ந்த மாயஜாலம் விலகும். அப்போது எந்த அர்த்தமும் புரிந்ததில்லை. கொடியில் பூவாய், பூவில் தேனாய், தேனில் சுவையாய் என்றுதான் பொதுவாக இலக்கியங்களில் எவரும் படித்திருக்கக் கூடும். அது அழகின் ஆடல். ஆனால் இந்த வேதங்களில் கொடியில் கொடியாய், பூவில் பூவாய் , தேனில் தேனாய், அதன் இனிப்பில் சுவையாய் ஆனது எதுவோ அதைப் பற்றிய சிந்தனை நிகழும். இது ஆன்மாவின் தேடல். மந்திர புஷ்பங்களை நுகர்பவர்கள் நுகர்ந்து கொள்ளட்டும். கேட்டு ரசிப்பவர்கள் ரசிக்கட்டும். தேனை ருசிப்பவர்கள் ருசிக்கட்டும். உள்ளத்தில் உணர்பவர்கள் உயரட்டும்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment