Sunday, March 7, 2010

கார்கில் ஜெய்யின் சாமியார் பயிற்சிக் கூடம்

செக்ஸ் பிரச்னை, வீடியோ இவற்றில் இருந்து தப்பிப்பது எப்படி?

ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி ஜில்பான்ஸ் செய்து மாட்டிக்கொள்ளும் வாலிப , வயோதிக சாமியார்களே, உங்கள் பிரச்சினை முற்றும் துறந்த சாமியாராக இருப்பது இல்லை, முற்றும் 'திறந்த' சாமியாராக இருப்பதுதான். இந்த அவல நிலைக்கு, வீடியோ பிரச்னைகளுக்கு தீர்வுதான் என்ன? இதோ கார்கில் ஜெய்யின் workshop :


0) கர கர குரலில் தமிழ் பேசவும். யாரவது திராவிடத்தலைவர் என்று நினைத்து எத்தனை மனைவி, பெண்கள் இருந்தாலும் பிரச்சினை ஏதும் வராது. ஒரு முறை அண்ணாத்துரை சொல்லி இருக்கிறார் : “[...நடிகை பெயர் ...] ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல. [....நடிகை பெயர் .....] என்பவள் ஒரு பேனா மைக்கூடு - அதை பேனாவை விட்டு விட்டு யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் நானும் பயன்படுத்தினேன்”

1) பொதுவாக தனி இடத்தில் அல்லது படுக்கை அறையில் பக்தர்களைச் சந்தித்தால் விளக்கை உடனடியாக அனைத்து விடவும். உலக வெப்பமயமாதலையும் தடுத்தற்போல் இருக்கும், வீடியோவால் மாட்டுவதையும் தடுக்கலாம்

2) நம்ம பரமஹம்ச நித்யானந்தரின் 'வீடியோ எடுத்த' சிஷ்யர் முன்பே 'இன்பத்தை அதிகரிக்கும் காந்தப் படுக்கை' என்று கோ ஆப்டேக்ஸ்சில் தள்ளுபடியில் வாங்கிய மெத்தையை பல லட்சம் ரூபாய்க்கு பல தொழில் அதிபர்களிடம் விற்று போலீசில் மாட்டிக்கொண்டவர். இவரின் பூர்வாசிரமப் பெயர் லெனின். இந்த மாதிரி சிஷ்யன் கிடைத்தால் உங்கள் கதி இப்படித்தான் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே நல்ல நம்பிக்கையான சிஷ்யராக தேர்ந்தெடுக்கவும். அபிஷ்டுவாக இருந்தால் நலம். மாலைக்கண் நோயுள்ள அபிஷ்டுவாக இருந்தால் உன்னதம்.

3) நேர்மையான, நல்ல பக்தர்களை விரட்டிவிட்டு தெர்தேடுத்த ஃபிராட்களை பிரதான சீடர்களாக ஏற்றுக்கொள்ளுதல் பொதுவாக சாமியார்களின் இயல்பு. அப்படி சீடர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்களை லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 'நோ கிரைம்' சர்டிபிகேட் வாங்கி வரச்சொல்லவும்.


4) டுபாக்கூர், பிராடு, மொள்ளமாரி, லெனின் போன்ற சிஷ்யர் இருந்தால், நிறைய பணக்காரர்களிடம் ஆசிரமத்தை மார்கெடிங் செய்யலாம் என்பதனாலும், காந்தப் படுக்கை ஓசியாகவே உங்களுக்கும் கிடைக்கும் என்பதாலும் நீங்களே இந்தமாதிரி சிஷ்யனை சேர்த்துக் கொண்டிருக்கக் கூடும். அப்படி இருந்தால்
a) வீடியோ ஜாம்மர் வைத்துக் கொள்ளவும்.

b) பி.சி. ஸ்ரீ ராமே எடுக்க முடியாத அளவு இருட்டாக பெட்ரூமை பார்த்துக் கொள்ளவும்.

c) பொங்கலுக்கு சுண்ணாம்பு அடிப்பது போல் தாராளமாக சந்தனம் பூசிக்கொள்ளவும். முகப்பரு, உஷ்ணத்துக்கும் நல்லது, காமேரவிலும் உங்கள் முகம் தெரியாது. கூட இருக்கும் சிஷ்யை மலையாள சிஷ்யையாக இருந்தால் கதக்களி போல் பச்சை, கருப்பு, சிகப்பெல்லாம் கூட பூசிக்கொள்ளலாம்.

d) அவ்வப்போது விபூதி தூவலாம். எதோ கனவுக்கட்சியில் பனிப்புகை பறப்பது போன்ற ஒரு ஸ்பெஷல் எபெக்டும் இருக்கும். கேமராவிடம் இருந்தும் தப்பிக்கலாம். நல்ல பழனி சித்தனாதன் ஜவ்வாது விபூதி கிடைத்தால் திவ்யம் .

5) கொசுவலை மாதிரி பரமஹம்ச தூளிகா மன்னிக்கவும் ஹம்சதூளிகா மஞ்சத்தைச் சுற்றி வேஷ்டி, காவித்துண்டு அல்லது மஞ்சள் நிறத்தில் தமிழர் தலைவரின் துண்டு ஆகியவற்றை வாங்கி மாட்டிவிடவும். இது காமெராவை நன்றாக மறைக்கும். ஆனால் டிவி பார்க்க சௌஹர்யமாக இருக்காது;அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவும் .


6) சாமியாரான உங்களுக்கு இளவயதே ஆனாலும் மிகவும் வயதானவர் மாதிரி வெள்ளை நிறத்தில் டை அடித்துக் கொள்ளவும். இதனால் சந்தேகப்படும், மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு குறையும். அப்படியே மாட்டிக்கொண்டாலும், விளம்பரம் கிடைத்துவிட்டதால், அதையே வைத்து தள்ளாத வயதிலும் தளராத இளமை ரகசியத்துக்கு, என்று சொல்லி எதாவது இமயமலை ரகஸ்ய மூலிகை லேஹியம் அல்லது காயகல்பம் இருப்பதாக சொல்லி ஆசிரமத்தை விட்டாலும், லேகிய அதிபராக மன்னிக்கவும் தொழில் அதிபராகி விடலாம்.

7) மஞ்சள் துண்டும், மூன்று பெண்டாட்டிகளும் வைத்துக்கொள்ளவும். உங்களை முதல்வர் என நினைத்து சன் டிவி, கலைஞ்சர் டிவி ஆகியோர் மதிப்பாக நடத்தக் கூடும்.

8) முற்றும் துறந்த நிர்வாண சாமியார் போல், முற்றும் மூடிய முகமூடி சாமியார் என பெயர் வரும் வகையில் முழுதும் மூடிக்கொள்ளலாம். இது வித்தியாசமான ஸ்டைலில் நிறைய பக்தர்களைக் கவரவும் உதவும். வீடியோவில் இருக்கும் முகமூடி நான் அல்ல, என் முகமூடியைச் சுற்றி ஒரு ஒளி தெரியும் என்று சொல்லி தப்பிக்கொள்ளலாம்.

9) உங்கள் பெயர் சுவாமி கிருபேஷ் தாஸ் எனவும் அந்த வீடியோவில் இருப்பது சிறுவயதில் காணமல் போன உங்கள் இரட்டை சகோதரர் அபேஸ் தாஸ் எனவும், உங்கள் கண் அபேஸ் தாஸ் மாதிரி இல்லாமல் டோரைக்கண் என்றும் சொல்லி நடித்துக் காட்டுங்கள். இந்த மாதிரி சீன் களுக்கு எஸ்.வீ. சேகர் மற்றும் பாண்டிய ராஜன் படம் பார்த்து வைத்துக் கொள்ளவும்.

10) கூடு விட்டுக் கூடு பாய்ந்து அப்போது வேறு ஒரு இடத்தில் இருந்ததாகவும், இது ஒரு தாந்த்ரீக யோகப் பயிற்சி என்றும் சொல்லிவிடலாம். இதை சிஷ்யர்களுக்கு அடுத்த பயிற்சியில் சொல்லிக்கொடுப்பதைக் கூறிவிட்டால், ஓஷோ யோகா மையத்தின் சீடர்களும் ஒடி வந்து நம் காலடியில் இருப்பார்கள்.

11) நடிகையை ரம்பா, ஊர்வசி போன்ற மயக்க வந்த அப்சரஸ்களாக எண்ணி கன்பியூஸ் ஆனதாகவும், இந்திரனின் கோவத்துக்கு ஆளாக வேண்டாம் என்று 'யதார்த்தமாக' விட்டுகொடுத்தாகவும் சொல்லிவிடாலாம்.

3 comments:

 1. ஐயா நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. நகைச்சுவையாக இருக்கிறது.

  anbudan
  ram

  www.hayyram.blogspot.com

  ReplyDelete
 2. Thank you for visit and appreciations hayyram.

  ReplyDelete
 3. அருமை கார்கில் ஜெய் ! :)

  சுவையாக இருக்கிறது.

  ReplyDelete