Wednesday, December 23, 2009

Mundaka Upanishad

[photo copy right Robert Noonan, Smithsonian publications ]
நான் இப்போது முண்டக உபநிஷத்தை விளக்கப் போவதில்லை. அவ்வாறு நான் அதிகப் பிரசங்கித்தனம் செய்தல் அது ரிஷிகளுக்கு செய்யும் இழுக்காகும். அதனால் அதில் உள்ள ஒரு குறிப்பைப் பற்றி மட்டும் எழுதப் போகிறேன்.

7. yathorṇa-nābhiḥ sṛjate gṛhṇate ca,
yathā pṛthivayām oṣadhayas sambhavanti,
sataḥ puruṣāt keśalomāni
tathākṣarāt sambhavatīha viśvam.


இந்த முண்டக உபநிஷதச் சுலோகத்தில் உள்ள முதல் வரியான

"யதொர்ணா நாபிஹி ஸ்ரஜதே க்ரணதே ச"

என்பதற்கு அர்த்தம் என்ன என்றால் , 'சிலந்தி தன் வயிற்றில் இருந்து சுரக்கும் நூலை எப்படி வெளியிட்டோ அல்லது திரும்பி கிரகித்துக் கொள்ளுமோ அதுபோல' என்பது தான். உண்மையில் சிலந்தி தான் வலையை, இந்த சுலோகத்தில் சொன்னது போல் கிரகித்துக் கொள்ளுமா? வலையை வயிற்றில் இருந்து சுரக்கும் இழையால் பின்னும் என்பது வரை உண்மைதான். ஆனால் திரும்பி உள்ளிழுத்துக் கொள்ள சிலந்தியால் உண்மையிலேயே முடியுமா? அல்லது சுலோகத்தில் சொல்லப்பட்டிருப்பது தவறாகவே இருக்க வாய்ப்பு அதிகம். ஜீவாத்மா, பரமாத்மாவை விட இது எளிதான விஷயமாகையால் தவறென்று நிரூபிக்க முயற்சி செய்தேன்.

இதற்காகவே லைப்ரரியில் தேடியதில், 1988 மார்ச் மாதம் வெளியான ஸ்மித்சோனியன் புஸ்தகத்தில் இருந்து தகவல் கிடைத்தது. வலையை வேண்டுமென்றால் சிலந்தி திரும்பி அப்படியே இழுத்துக் கொண்டு பின்பு உபயோகப் படுத்துமாம்!!!. என் முயற்சி தோல்வியே. இதைக்கூட வேத காலத்தில் கவனித்து இருக்கிறார்களே? ஒருவேளை அப்போது மனிதர்களின் கண் பார்வை மேலும் கூர்மையாக இருந்திருக்கக் கூடுமோ? எப்படி இருந்தாலும் உபநிஷதத்தில் சொல்லப்பட்டிருப்பது எதுவும் பொய் என நிரூபிக்கப் பட்டது இல்லை . அதற்கு இதுவும் ஒரு சான்று.




[photo copy right Robert Noonan, Smithsonian publications ]


[photo copy right Robert Noonan, Smithsonian publications ]





2 comments:

  1. //இதைக்கூட வேத காலத்தில் கவனித்து இருக்கிறார்களே?//

    நண்பர் ஜெய் அவர்களே! நல்ல விஷயத்தை சரியாக கவனித்திருக்கிறீர்கள். நம் முன்னோர்கள் இயற்கையின் பல நுண்ணிய விஷயங்களைப் பற்றி மிகப்பெரிய அளவில் இருந்திருக்கிறார்கள். அவர்களது அறிவை மறைக்க சிலுவைக்காரன் செய்யும் வேலைகளைத்தான் இன்றைய அரசியல் வாதிகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். நம்மால் முடிந்தவரை நம் முன்னோர்களின் அறிவை வெளிப்படுத்துவோம். அதில் கைகோர்ப்போம்.

    அன்புடன்.
    ராம்

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  2. Ram,
    thank you for visit. I will catch up with you sometime.
    regards,
    Jay

    ReplyDelete