Thursday, August 12, 2010

கருணாநிதிக்கு அறிவுரை


==============================================
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0907/20/1090720005_1.htm

ராமாயணத்தை இளமை காலம் முதல் இன்று வரை விமர்சித்துக் கொண்டிருப்பவன்
எ‌ன்று‌ம் இனியும் விமர்சிக்க இருப்பவன் என்று‌ம் முதலமை‌ச்ச‌ர்
கருணாநிதி தெரிவித்துள்ளார்.


மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கன்னடத்தில் எழுதிய,
‘‘ஸ்ரீ ராமாயணப் பெருந்தேடல்’’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலின்
வெளியீட்டு விழா சென்னையில் நே‌ற்று மாலை நடைபெ‌ற்றது. முதல் பிரதியை
முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி வெளியிட, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்
கொண்டார்.


விழாவில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி பேசுகை‌யி‌ல், ராமாயண நூல் வெளியீடா?
அதிலே கருணாநிதி பங்கேற்பதா? என்று பலர் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.
ஆமாம், ராமாயண நூல் வெளியீடுதான், அதில் கருணாநிதி பங்கேற்றது
மாத்திரமல்ல, அதை வெளியிட்டும் உரையாற்றியிருக்கிறார் என்பதுதான் இன்றைய
செய்தி. இதில் ஒன்றும் முரண்பாடில்லை.


நான், ராமாயணத்தை இளமை காலம் முதல் இன்று வரை விமர்சித்துக்
கொண்டிருப்பவன். இனியும் விமர்சிக்க இருப்பவன். புத்தகத்தின் பெயர்,
ராமாயணப் பெருந்தேடல். தேடல்கள் என்றால், கண்டுபிடிக்க முடியாமல் இந்த
நூலிலே புதைந்து கிடக்கிற கருத்துக்களை தேடி எடுத்து மக்களுக்கு
உணர்த்துகிற அந்தப் பணியை இந்த நூலின் மூலம் வீரப்ப மொய்லி செய்துள்ளார்.


இந்த முதல் பாகத்தில் ராமாயணக் கதையின் தொடக்கத்தில் இருந்து கானகம்
சென்றுள்ள ராமனின் பாதுகையை பெற்று பரதன் நாடு திரும்பியது வரை
எடுத்துரைக்கப்படுகிறது. அதைத்தான் அவ்வை நடராஜன் பேசும்போது,
‘‘எங்களுடைய கலைஞர் பரதாயணம் எழுதியவர்’’ என்று குறிப்பிட்டார். ராமன்
காட்டில் கடும் வெயிலில் துன்பப்படுகின்ற நேரத்தில் அவன் பாதுகையையும்
பிடுங்கி கொண்டு வந்து விட்டான் என்று பரதனை குறை கூறி நான் எழுதிய அந்த
புத்தகத்தின் பெயர்தான் பரதாயணம்.


வீரப்ப மொய்லியின் சிந்தனைகள் இந்த நூலில் எப்படி இழையோடி புரட்சி
எரிமலையாக வெடித்து சிதறியிருக்கின்றன என்பதை பல பாடல்கள் வாயிலாக
என்னால் உணர முடிகிறது. என்னுடைய பால பருவத்தில் நான் தீவிரமான
பகுத்தறிவுவாதி. இப்போதும் அது தொடர்கிறது. தொடர்ந்து கொண்டே இருக்கும்.


ராமாயணம் ஒரே கதை என்று சொல்லப்பட்டாலும் சில குறிப்பிட்ட அம்சங்களை
ஒவ்வொரு நூல் ஆசிரியர்களும் வேறுபாடாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.
குறிப்பாக வால்மீகி ராமாயணத்தைத் தொடர்ந்து தமிழிலே எழுதிய கம்பர், தனது
கம்ப ராமாயணத்தில் கவுதம முனிவரின் மனைவி அகலிகையைப் பற்றிக் கூறும்போது,
இந்திரன், அகலிகையின் அழகில் மயங்கி, கவுதம முனிவராக உருமாறிச் சென்று
வஞ்சகமான முறையில் அகலிகையை கூடுகிறான் என்றும்; இதனை அறிந்த கவுதம
முனிவர் அகலிகையைக் கல்லாகச் சபிக்கிறார் என்றும் அந்தக் கதை முடிகிறது.


அப்போது கல்லாக மாறிய அகலிகை, ராமன் காட்டுக்கு வந்த போது அவன் கால்
பட்டு மீண்டும் தனது உருவை அடைந்து கவுதம முனிவரோடு சேர்ந்து வாழ்ந்தாள்
என்றும் கூறியுள்ளார்.


இது வீரப்ப மொய்லியால் தாங்கிக் கொள்ளக் கூடிய சம்பவமாக இல்லை. ஒரு பெண்
எந்த அளவிற்கு இழிவுபடுத்தப்படுகிறாள் என்ற ஆத்திரம் பீறிடுகின்ற
காரணத்தால், அவர் இதை மாற்றி எழுதுகிறார். இதிலே குற்றவாளி அகலிகையா,
தேவேந்திரனா என்று கேட்டு, இந்திரன்தான் குற்றவாளி என்று ஆண்
வர்க்கத்தைச் சாடுகிறார் வீரப்ப மொய்லி. ஒரு நீதியை பெண்ணுக்கு
வழங்குகிறார். அந்தப் பெண் கையறு நிலையிலே இந்திரனிடம் தவறு இழைக்க
வேண்டிய அவசியத்திற்கு ஆளானாள் என்று இவர் எழுதுகிறார்.


வால்மீகி ராமாயணத்தில் வந்த அகலிகை வேறு, கம்ப ராமாயணத்தில் காட்டுகின்ற
அகலிகை வேறு, ராஜாஜி எழுதிய ராமாயணத்திலே காட்டப்படுகின்ற அகலிகை வேறு,
இவர்கள் எல்லாம் தவறு இழைத்த அகலிகை, ஆனால் நான் இதோ காட்டுகின்ற அகலிகை
தவறு இழைக்குமாறு செய்யப்பட்ட பெண் என்று இந்திரன் மீது கடும் கோபத்தைக்
காட்டுகிறார். அகலிகை தவறு செய்ய தூண்டப்பட்டு சபிக்கப்பட்டவள் என்றார்
துளசிதாசர். கவுதம முனிவர் வேடம் போட்டு வந்தவர் இந்திரன் தான் என்பதை
பிறகு உணர்ந்தும் கூட அகலிகை அதற்கு சம்மதித்தாள் என்பது கம்ப ராமாயணம்.
கம்ப ராமாயண பக்தர்கள் யாராவது இருந்தால் என் மீது கோபித்துக் கொள்ளக்
கூடாது. உள்ளதைத்தான் சொல்கிறேன்.



ஏன் இவற்றை சொல்கிறேன் என்றால் இளமையிலேயே ஊறிய பகுத்தறிவு, அதன் காரணமாக
எழுகிற கேள்விகள் அந்தக் கேள்விகள் ராமாயணத்தைப் பற்றியும்
வந்திருக்குமேயானால் வீரப்ப மொய்லி பொறுத்துக் கொள்ள வேண்டும். “இந்த
நூலில் பெண்ணுரிமை கருத்துகளை, ஏழை எளிய மக்கள் வாழ்வில் இருக்கும்
கஷ்டங்களை எரிமலை போல அவர் வர்ணித்துள்ளார். அதற்காக நான் அவரை
பாராட்டுகிறேன்'' முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி பேசினார்.

=============================================================================
திரு கருணாநிதி ,
0)அகலிகைகள் கல்லாக மாற, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களின்மேல் கண்வைக்கும் உங்கள் போன்றோர் தானே காரணம் ?

1) அகலிகை பற்றி வருத்தப்படும் அளவுக்கு நீங்கள் பெண்களின் மேல் கண்ணியமான பார்வையோ மதிப்போ உள்ளவரா ? எதிர்க்கட்சி செயலரும் முன்னால் முதல்வரையும் கூட 'முன்னாள் நடிகை' என்று குறிப்பிட்டு அநாகரீகமான சிந்தனைகளை வெளியிட்டவர் நீங்கள்.

2) இராமாயணத்தை சொல்லிகொடுத்தால், தந்தையை மதித்து காட்டுக்கும் செல்லவேண்டும் என்பதும், அண்ணன் தம்பிக்கு விட்டுக் கொடுத்தலையும், தியாகத்தையும் புரிந்துணர முடியும். ஆனால் நீங்கள் இராமாயணத்தை உங்கள் மனைவிகளின் மகன்களுக்கு சொல்லிக் கொடுத்தபோது 'காட்டுக்கு சென்ற ராமனிடம் பரதன் செருப்பையும் ஏமாற்றி வாங்கி வந்துவிட்டான்.. தம்பியை நம்பாதே ' ('செருப்பு' சிந்தனை) என்று திராவிட முறைப்படி விளக்கி இருக்கிறீர்கள். விளைவு: ஒரு மனைவியின் மகனான ஸ்டாலின் (தம்பி)ஏமாற்றிவிடுவான் என்ற ஆத்திரத்தில் இன்னொரு மனைவியின் மகன், (அண்ணன்) காண்டாமிருக நெஞ்சன் அழகிரி தினகரன் அலுவலகத்தில் புகுந்து இளம் பொறியாளர்களைக் கொலை செய்யும் அளவுக்கு வெறி பிடித்து அலைகின்றனர். ராமன் விட்டுக்கொடுத்தான். அழகிரி கொலை செய்கிறான். கொலைகாரனை உருவாக்கி இதில்என்ன பெருமை?

இராமாயணத்தில் புத்திர சோகத்தை தசரதன் எதிர்கொள்கிறான் உயிர்விடுகிறான். காரணம் : எதிர்பாராத விபத்தாக, நீர் கொள்ளச் சென்ற சிராவணனின் மேல் அம்பெய்ததுதான்.

அனால் உங்கள் இரத்த சம்பந்தம் பலரை ரத்தம் சிந்த வைக்கிறதே, அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒரு நீதிபதி "சன் டிவில காமிச்சதேல்லாம் பொய்.. ஏசி ஷார்ட் சர்க்யூட் னால்தான் தீ விபத்து நடந்து செத்துட்டாங்க" என்று அழகிரியை விடுதலை செய்திருக்கிறார்.

விபத்துக்கு தண்டனை அனுபவிக்கச் சொன்ன இராமாயணம் எங்கே? கொலையை விபத்துதான் என எழுதும் நீங்கள் எங்கே ?

கொலை, காம வெறி, பதவி வெறி, இன வெறி ஆகியவற்றை விட்டுவிடுங்களேன்? ஒவ்வொரு கிறிஸ்தவனையும், இஸ்லாமியனையும், ஹிந்துவையும் சகோதர பாசத்தோடு நல்ல தமிழனாக உருவாக்க முடியும். ஆனால் இன வெறியைத்தூண்டி கொலைகாரானக்குவது உங்கள் 'செருப்பு' சிந்தனைகள் தான். உங்கள் பண வெறிதான் அப்துல் கலாமாக மலரவேண்டிய இஸ்லாமியன் மதாநியாக மாறுவதருக்கு காரனாக உள்ளது. சற்றே நேர்மையுடன் நடக்கலாமே?


--
Jay

No comments:

Post a Comment